நான் ஏன் முஸ்லீம் ஆனேன்?பிரான்ஸ்
ராப் இசைப்பாடகி டியாமஸ்
இவரது
இயற்பெயர் “மெலனி ஜார்ஜியேடஸ்” இவர் இசைத் துறைக்காக வைத்துக் கொண்ட பெயர்
“டியாமஸ்”(DIAM’S). இவர்
பிரான்ஸ் நாட்டின் மிகப் பிரபலமான ராப் இசைப் பாடகி ஆவார். இவர் MTV குழுமத்தால் வழக்கப்படும் “MTV EUROPE MUSIC
AWARDS” என்ற விருதை வாங்கியவர். இவர் கடந்த 2008 ம் ஆண்டு
இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தை ஏற்றதை உலகத்திற்க்கு சொல்லாத
அவர் கடந்த 2012
ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி பிரான்ஸ் நாட்டின் பிரபல T1
தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அதில்
அவர் தொழிலாக தேர்ந்தெடுத்த இசைத்துறையில் நான் வெற்றி பெற்று பணம்,புகழை பெறவே
செய்தேன். விருதுகள் என்னை தேடி வந்தன.ஆனால் அது எனக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளை
தீர்கவில்லை. நிகழ்சிகளில் நான் ஆடிப் பாடி சிரித்தாலும்,பலரை மகிழ்ச்சியில்
திளைக்க செய்தாலும் தனிமையில் வீட்டில் அழவே செய்தேன்.நான் புகழின் உச்சத்தில்
மகிழ்ச்சியாக இருப்பதாக மக்கள் நம்பினார்கள். ஆனால் நான் பெரும் துயரத்தில் தான்
இருந்தேன். மனதை சமாதானப்படுத்த மதுவை நாடி சென்றேன்.விளைவு மது,மற்றும் போதை
பழக்கத்துக்கு ஆளானேன். இது கொஞ்சம் கொஞ்சமாக என்னை மனநல பாதிப்புக்கு
உள்ளாக்கிவிட்டது.என்னை பல உளவியல் நிபுணர்களிடம் அழைத்து சென்று,பல முறை கவுன்சிலிங் செய்தனர்.ஆனால் அது
எந்த பலனையும் தரவில்லை.
இந்நிலையில்
என் உடல்நிலை பற்றி கேள்விப்பட்ட என்னுடைய பள்ளிதோழி என்னை சந்திக்க வந்தாள்.அவள்
ஒரு முஸ்லீம். அவள் என்னை விசாரித்துவிட்டு விடை பெரும் பொழுது என்னிடம்
சொன்னாள்,”நான் உனக்காக இங்கே தொழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்
போகிறேன்”என்றாள். நான் உடனே நானும் தொழ இயலுமா?என்று கேட்டேன்.பின்பு எனக்கு தொழ
கற்று தந்தாள்.ஆவலுடன் சேர்ந்து நானும் தொழுதேன். தொழுகையில் முழங்கால் இட்டு
நெற்றியை தரையில் வைத்து சுஜூது செய்தேன்.அச்சமயம் படைத்த இறைவனுடன் தொடர்பு
ஏற்படுவதையும்,நான் ஏங்கி வந்த நிம்மதி எனது மனதுக்குள் ஊடுருவுவதையும்
உணர்ந்தேன். இதற்கு முன்னர் அப்படி ஒரு உணர்வு என் வாழ்க்கையில் ஏற்பட்டதில்லை.என்
மனதுக்குள் நினைத்தேன் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இதனை செய்யக்கூடாது என்று.
இந்நிலையில்,இஸ்லாத்தை மேலும் தேர்ந்து கொள்ள விரும்பினேன். தொடர்ந்து
குர்ஆனைப் படித்தேன்.பின் திருகுர்ஆனை புரிது கொள்ள 2008ம் ஆண்டு
மொரீசியஸ் நாட்டுக்கு சென்றேன்.இஸ்லாம் அமைதி மார்க்கம்,அகிம்சை மார்க்கம்,அன்பையும்,சகிப்புத்தன்மையும்
,பிறருக்கு உதவி செய்வதையும் போதிக்கும் மார்க்கம் என்பதை புரிந்து கொண்டேன்.மேலும்
இயேசு,மோசஸ்,ஆப்ரஹாம்,சாலமோன் என உலகில் தோன்றிய அணைத்து இறைதூதர்களின்
மார்க்கமும் இஸ்லாம் தான் என அறிந்தேன்.
இறைவன் இருக்கிறான் என்பதை நம்பத் தொடங்கிய நான் எனது வாழ்கையை
யோசித்தேன்.நான் ஏன் பூமியில் இருக்கிறேன்?நான் உயிர் வாழ்வதின் நோக்கம் தான்
என்ன?இந்த புகழ்,பணம்,அந்தஸ்து எல்லாம் எனது இதயத்தை சூடாக்கவே செய்துள்ளன.இதயத்தை
குளிர்விக்கும் இஸ்லாத்தை ஏன் நான் ஏற்கக்கூடாது?என சிந்தித்தேன்.இஸ்லாத்தை என்
வாழ்க்கை நெறியாக ஏற்றேன்.
No comments:
Post a Comment