Thursday, January 31, 2013

குழந்தைகளும் தொலைக்காட்சியும்

                 


       குழந்தைகளும் தொலைக்காட்சியும்
பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது 
அக்கறையுள்ளவர்களா? … படியுங்கள்.


குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு 
ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. 
மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.

1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் 
தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.

2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் 
செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். 
(தூங்குவதைத்தவிர).

3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை 
நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.

4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. 
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் 
செய்யப்படுகின்றன.

5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட 
விளம்பரங்களை குழந்தைகள் பார்f;கின்றன.

குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:

1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.

2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் 
கற்பிப்பதில்லை அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.

3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது 
விளையாடுவது, பழகுவது, வீட்டுப்; பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை 
செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை 
நிர்மூலமாக்குகிறது.

4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, 
மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய 
பின்விளைவுகளைப் பெறுகின்றன.

வன்முறையும் தொலைக்காட்சியும்

1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு 
பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை 
நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் 
காண்பிக்கப்படுகின்றன.

3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் 
பார்க்கின்றன.

4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் 
பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட 
முனைகின்றன.

5. பள்ளியில் சேருமுனனரே (Aduls) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.

6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.

7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.

8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் 
காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.

9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது 
சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.

10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் 
மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.

தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:

1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது 
என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன் , 
எழுதும் நேரத்திற்கு முன,. சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் 
இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.

2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.

4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.

5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் 
மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.

6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.

7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் 
படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட 
உதவும். டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் 
சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.

‘குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின்) மழலைச் சொல் 
கேளாதார்’ என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை 
விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள்

தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்!

Monday, January 28, 2013

ஜூம்மா உரை 25-01-13 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி



ஜூம்மா உரை 25-01-13 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி
இடம் : கலாச்சரப்பள்ளி , நாகர்கோவில்

Saturday, January 26, 2013

நரகத்தை நோக்கி .... குறும்படம்




அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் .காதல் என்ற பெயரில் மோசடி செய்யப்படும் பெண்கள் பற்றிய குறும்படம்.


Friday, January 25, 2013

நட்பு வட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் ?


நட்பு வட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் ?


ஜூம்மா உரை 18-01-13 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி
இடம் : கலாச்சரப்பள்ளி , நாகர்கோவில் 

Friday, January 18, 2013

குமரி மாவட்ட இஸ்லாமிய மாணவ ,மாணவியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
குமரி மாவட்ட இஸ்லாமிய மாணவ ,மாணவியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு .



Thursday, January 17, 2013

ஜூம்மா உரை 11-01-13 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி


ஜூம்மா உரை 11-01-13 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி
இடம் : கலாச்சரப்பள்ளி , நாகர்கோவில்

Tuesday, January 8, 2013

ஜூம்மா உரை 04-01-13 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி



ஜூம்மா உரை 04-01-13 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி
இடம் : கலாச்சரப்பள்ளி , நாகர்கோவில்

இயக்கங்கள் என்ற பெயரிலே போராட்டம் என்ற பெயரிலே ஆண் பெண் கலப்படம்



இயக்கங்கள் என்ற பெயரிலே போராட்டம் என்ற பெயரிலே ஆண் பெண் கலப்படம்

Wednesday, January 2, 2013

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு
வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.
மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.
ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றேடி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்குர்ஆனை ஏற்றார்.
இது தொடர்பாகஎகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:
அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால்ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.
அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்பஅமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில்அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோதுஅப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
இதிலிருந்துமூன்று மாத இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால்டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல்மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.

மௌலவி அ.முஹம்மது கான் பாகவி 

Tuesday, January 1, 2013

ஜூம்மா உரை 28-12-12 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி


ஜூம்மா உரை 28-12-12 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி
இடம் : கலாச்சரப்பள்ளி , நாகர்கோவில்