Wednesday, October 23, 2013

இளம்பெண்களின் இன்றைய நிலை:


ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.
இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.
இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;
தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;
மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.
அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

இஸ்லாத்தின் பார்வையில் புகைப்பழக்கம்


அனைத்து சமுதாய மக்களையும் ஆட்டுவிக்கும் ஆட்கொல்லியாக புகைப்பழக்கம்உள்ளது. மனிதனின் உடலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் மதுவை தடை செய்தது போல் புகைப்பிடித்தல் பற்றி திருக்குர்ஆனும் நபிமொழியும் நேரடியாகத் தடை செய்யவில்லை என்று கருதி சிகரெட், சுருட்டு, பீடி போன்றவற்றை உபகோகிக்கும் முஸ்லிம்கள் தாங்கள் தடைசெய்யப்பட்ட ஒரு செயலை செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் புகைபிடித்து வருகின்றார்கள்.
புகைபிடித்தலை இஸ்லாம் தடை செய்யவில்லை என்று வாதிடவும் முஸ்லிம்களில் சிலர் வெட்கப்படுவது இல்லை. திருக்குர்ஆனும் நபிமொழியும் தடை (ஹராம்) செய்துள்ள செயல்களின் தன்மைகள் அனைத்தையம் தன்னகத்தே கொண்டுள்ள செயல்தான் புகைப்பிடித்தலாகும் என்பதில் சந்தேகமில்லை.
முழு மனித சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு உலகத்தில் உள்ள அனைத்து செயல்களின் வழிகாட்டியாக அமைந்துள்ளது திருக்குர்ஆன்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் இன்னும் நன்மை செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை   -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2: 195)
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் இன்னும் நன்மை செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை   -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2: 195)
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 29)
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும்,பரிசுத்தமானவற்றையும்  உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனானவான் என்று அல்குர்ஆன் 2: 168 கூறுகின்றது.
தனக்குத்தானே அழிவைத் தேடித்தரும் அனைத்துச் செயல்களையும் திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் தடை செய்துள்ளன. புகைப்பிடிக்கும் மனிதன் தன்னை மெல்ல மெல்ல அழித்துக் கொள்கிறான் என்பதற்கு அடுக்கடுக்கான மருத்துவச் சான்றுகள் வந்தவண்ணம் உள்ளன.
புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, ஆண்மையின்மை, குறைபிரசவம், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கு வழித்தடம் அமைத்துக் கொடுக்கிறது. இந்தப்பழக்கத்திற்கு அடிமையாகும் மனிதன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான் என்பதில் சந்தேகமில்லை.
அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் விஷம் உட்கொண்டு தன்னைத் தானே கொன்று விடுகிறாரோ அவர் நரக நெருப்பிலும் விஷத்தை உட்கொண்டு அதில் என்றென்றும் நிரந்தரமாக தங்கி விடுவார். அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி) அவர்கள் நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்
புகைத்தலின் மூலம் மனிதர் உள்ளிலுக்கும் புகையில் நிக்கோடின், கார்பன், டார், கார்பன் மோனாக்ஸைடு, ஆர்செனிக் போன்ற கடும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இந்த நச்சுகள் உள்ளுறுப்புகளை நாசமாக்கி தவணை முறையில் உயிரைப் பறிக்கும். மேற்கண்ட திருக்குர்ஆன், நபிமொழியின்படி பார்த்தால் புகைப்பவர்கள் தன்னைத்தானே அழித்துக் கொள்பவர்கள் என்பதும் புகைப்பழக்கம் நரகிற்கு அழைத்துச் செல்லும் என்பதும் சந்தேகம் இல்லை. அல்லாஹ் மிக நன்கு அறிந்தவன்.