Thursday, February 19, 2015

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்?

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்?பிரான்ஸ் ராப் இசைப்பாடகி டியாமஸ்
                      இவரது இயற்பெயர் “மெலனி ஜார்ஜியேடஸ்” இவர் இசைத் துறைக்காக வைத்துக் கொண்ட பெயர் “டியாமஸ்”(DIAM’S). இவர் பிரான்ஸ் நாட்டின் மிகப் பிரபலமான ராப் இசைப் பாடகி ஆவார். இவர் MTV குழுமத்தால் வழக்கப்படும் MTV EUROPE MUSIC AWARDS என்ற விருதை வாங்கியவர். இவர் கடந்த 2008 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தை ஏற்றதை உலகத்திற்க்கு சொல்லாத அவர் கடந்த 2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம்  தேதி பிரான்ஸ் நாட்டின் பிரபல T1 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
                                 அதில் அவர் தொழிலாக தேர்ந்தெடுத்த இசைத்துறையில் நான் வெற்றி பெற்று பணம்,புகழை பெறவே செய்தேன். விருதுகள் என்னை தேடி வந்தன.ஆனால் அது எனக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளை தீர்கவில்லை. நிகழ்சிகளில் நான் ஆடிப் பாடி சிரித்தாலும்,பலரை மகிழ்ச்சியில் திளைக்க செய்தாலும் தனிமையில் வீட்டில் அழவே செய்தேன்.நான் புகழின் உச்சத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாக மக்கள் நம்பினார்கள். ஆனால் நான் பெரும் துயரத்தில் தான் இருந்தேன். மனதை சமாதானப்படுத்த மதுவை நாடி சென்றேன்.விளைவு மது,மற்றும் போதை பழக்கத்துக்கு ஆளானேன். இது கொஞ்சம் கொஞ்சமாக என்னை மனநல பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது.என்னை பல உளவியல் நிபுணர்களிடம் அழைத்து  சென்று,பல முறை கவுன்சிலிங் செய்தனர்.ஆனால் அது எந்த பலனையும் தரவில்லை.
                                   இந்நிலையில் என் உடல்நிலை பற்றி கேள்விப்பட்ட என்னுடைய பள்ளிதோழி என்னை சந்திக்க வந்தாள்.அவள் ஒரு முஸ்லீம். அவள் என்னை விசாரித்துவிட்டு விடை பெரும் பொழுது என்னிடம் சொன்னாள்,”நான் உனக்காக இங்கே தொழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்யப் போகிறேன்”என்றாள். நான் உடனே நானும் தொழ இயலுமா?என்று கேட்டேன்.பின்பு எனக்கு தொழ கற்று தந்தாள்.ஆவலுடன் சேர்ந்து நானும் தொழுதேன். தொழுகையில் முழங்கால் இட்டு நெற்றியை தரையில் வைத்து சுஜூது செய்தேன்.அச்சமயம் படைத்த இறைவனுடன் தொடர்பு ஏற்படுவதையும்,நான் ஏங்கி வந்த நிம்மதி எனது மனதுக்குள் ஊடுருவுவதையும் உணர்ந்தேன். இதற்கு முன்னர் அப்படி ஒரு உணர்வு என் வாழ்க்கையில் ஏற்பட்டதில்லை.என் மனதுக்குள் நினைத்தேன் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இதனை செய்யக்கூடாது என்று.
                                  இந்நிலையில்,இஸ்லாத்தை மேலும் தேர்ந்து கொள்ள விரும்பினேன். தொடர்ந்து குர்ஆனைப் படித்தேன்.பின் திருகுர்ஆனை புரிது கொள்ள 2008ம் ஆண்டு மொரீசியஸ் நாட்டுக்கு சென்றேன்.இஸ்லாம் அமைதி மார்க்கம்,அகிம்சை மார்க்கம்,அன்பையும்,சகிப்புத்தன்மையும் ,பிறருக்கு உதவி செய்வதையும் போதிக்கும் மார்க்கம் என்பதை புரிந்து கொண்டேன்.மேலும் இயேசு,மோசஸ்,ஆப்ரஹாம்,சாலமோன் என உலகில் தோன்றிய அணைத்து இறைதூதர்களின் மார்க்கமும் இஸ்லாம் தான் என அறிந்தேன்.

இறைவன் இருக்கிறான் என்பதை நம்பத் தொடங்கிய நான் எனது வாழ்கையை யோசித்தேன்.நான் ஏன் பூமியில் இருக்கிறேன்?நான் உயிர் வாழ்வதின் நோக்கம் தான் என்ன?இந்த புகழ்,பணம்,அந்தஸ்து எல்லாம் எனது இதயத்தை சூடாக்கவே செய்துள்ளன.இதயத்தை குளிர்விக்கும் இஸ்லாத்தை ஏன் நான் ஏற்கக்கூடாது?என சிந்தித்தேன்.இஸ்லாத்தை என் வாழ்க்கை நெறியாக ஏற்றேன். 

Wednesday, February 11, 2015

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்?

நமது இந்திய தேசத்தில் உள்ள பா.ஜ.க.,சிவசேனா போன்று இஸ்லாமிய எதிர்ப்பை கட்சியின் கொள்கையாக கொண்டு நெதர்லாந்து நாட்டில் செயல்படும் கட்சி “தீவிர வலதுசாரி இஸ்லாமிய எதிர்ப்பு சுதந்திர கட்சி “(GEERT WILDERS FAR RIGHT-WING ANTI-ISLAM FREEDOM PARTY).இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும்,அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹாக்(HAGUE)கின் கவுன்சிலராகவும் பதவி வகித்தவர் அர்னாடு வேண்டூன்(ARNOUD VANDOORN).இவர் தமது வாழ்வின் பெரும்பகுதியை இஸ்லாத்தை எதிர்ப்பதில் தான் கழித்தார். இந்நிலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவாக சித்தரித்து திரைப்படம் எடுப்பது, கார்டூன் வரைவது ஆகியன சமீபகாலமாக ஐரோப்பிய கிறிஸ்தவ உலகம் செய்துவரும் காழ்புணர்வு காரியங்கள். இது உலகறிந்த உண்மை.அதன் அடிப்படையில் கடந்த 2012 ம் ஆண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்” திரைப்படம் வெளிவந்தது.அப்படத்திற்கெதிராக உலகம் முழுவதும் முஸ்லீம்கள் கொந்தளித்தார்கள்.பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.இது அர்னாடை சிந்திக்க வைத்தது.ஒருவர் இறந்து பால்லாண்டு கழிந்த பின்னரும் அவர் மீது இத்தனை மில்லியன் மக்கள் மரியாதை வைத்துள்ளார்களா?
அதற்கான காரணத்தை தேடி தொடர்ந்து இஸ்லாத்தை ஆய்வு செய்தார்.விளைவு அவர் கட்சியை விட்டு நீங்கினார்.மேலும் முஸ்லீம்களின் பழக்க வழக்கங்களைடும், பண்பாடுகளையும் தெரிந்து கொள்ள தன்னுடன் ஹாக் நகரில் பணியாற்றிய சக முஸ்லீம் நண்பர்களோடு பழகினார்.பின்னர் ஒரு முடிவுக்கு வந்து ஹாக் நகரில் உள்ள “மஸ்ஜிதுஸ்சுன்னா” பள்ளிவாசலுக்கு சென்று அங்குள்ள இமாம் “பவாஸ் ஜுனைத்” அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்றார்.
இது பற்றி அவர் தனது வலைப்பக்கத்தில் கூறியதாவது:
“நான் எனது வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன்.அத்தவறுகள் எனக்கு பல பாடங்களை தந்துள்ளன.இஸ்லாத்தை எதிர்த்தே எனது வாழ்நாளின் பெரும் பகுதியை கழித்தேன்,ஆனால் இஸ்லாம் தான் எனக்கு நிம்மதியை தந்துள்ளது.இஸ்லாத்தை ஏற்ற பின்பே உண்மையான வழி எனக்கு கிடைத்தது.இப்போது நான் நம்புகிறேன்,இப்புதிய தொடக்கம் எனக்கு நல்ல விதமாகவே அமையும்.அத்துடன் எனது இந்த முடிவு பலத்த எதிர்ப்பை எதிர் கொள்ளலாம்.நிச்சயமாக அல்லாஹ்வின் எல்லா வகையான உதவிகளும் எனக்கு கிடைக்கும்.எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளிப்பேன் இன்ஷா அல்லாஹ்”-இவ்வாறு கருது தெரிவித்த இவர் பின்னர் 2013 ஏப்ரல் மாதம் உம்ரா செய்தார்.