Saturday, June 29, 2013

இறைதூதர்களின் வேதக்கட்டளைகள்




இறைதூதர்களின் வேதக்கட்டளைகள்

இறைவனால் நபிமார்களுக்கு என்னென்ன வேதக்கட்டளைகள் அருளப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.அவைகளில் மிகவும் முக்கிய மானவற்றை குர்ஆன் பின்வருமாறு பட்டியலிட்டுக் கூறுகிறது.

1.இறைதூதர்கள் யாவரும் நமது கட்டளைப்படி வேதத்தையும், நீதியையும் நிலைநாட்டி வரவேண்டும்..
‘நாம் நமது தூதர்களை தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம்.’ (57:25)

2.அவர்கள் உழைத்து ஹலாலான உணவை தேடிக் கொள்ள வேண்டும்.
‘தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள். நல்ல முறையில் (உழைத்து)ச் செயலாற்றுங்கள். (23:51)

3.முன்வாழ்ந்த நபிமார்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் நாம் கடைபிடித்து வரும் நல்ல அமல்கள், வணக்கங்கள் போன்றவற்றைச் செய்து வரவேண்டுமென வும் கட்டளையிடப்பட்டுள்ளனர்.
‘நல்லவற்றை செய்யுமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும்,ஸகாத் கொடுக்கு மாறும் அவர்களுக்கு அறிவித்தோம்.(குர்ஆன்-21: 73)

4.இறைர்}தர் இஸ்மாயீல் (அலை)அவர்கள் தமது மக்களுக்கு தொழுகையையும், ஸகாத்தையும் போதித்து வரக்கட்டளையிடப்பட்டார்.
‘அவர்கள் தமது குடும்பத்தாருக்கு தொழுகையையும், ஸகாத்தையும் ஏவக்கூடிய வராக இருந்தார்கள். (குர்ஆன்-19: 55)

5. நபி மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் கூறினான்.
‘என்னை நீர் வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக. (குர்ஆன்-20: 14)

5. நபி ஈஸா(அலை) அவர்கள் “நான் உயிருடனிந்து என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸகாத் கொடுக்குமாறும் (இறைவன்) எனக்குக் கட்டளையிட்டான்”. (குர்ஆன்-19: 31.32) எனக்கூறினார்கள்.

6. நோன்பு நம்மீதும் கடமையாக்கப்பட்டதைப் போன்றே நமக்கு முன்வாழ்ந்தவர்கள் மீதும் கடமையாக்கப்பட்பட்டுள்ளது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக நோன்பு உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டவாறே உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (குர்ஆன்-2:183)

7. இப்றாஹீம் (அலை) அவர்கள் கஃபாவை கட்டி முடித்ததும் அவர்கள் மீது ஹஜ்ஜு கடமையாக்கப்பட்டது.
‘ மக்களுக்கு ஹஜ்ஜைப்பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், மெலிந்த ஒட்கத்தின் மீதும் மீதும் வருவார்கள். (குர்ஆன்-22:27.)

8. உலகிலுள்ள அனைவருக்கும் இப்றாஹீம் (அலை) செய்த ஹஜ்ஜுக்கிரியை களையும், வணக்கங்களையும் எல்லோர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.

‘சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தியுள்ளோம். (குர்ஆன்-22:34)
‘ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். அதை அவர்கள் கடைபிடிக்கின்றனர். (குர்ஆன்-22:67)

ஏகத்துவ நெறி, தொழுகை,நோன்பு,ஸகாத்,ஹஜ்ஜு ஆகிய இறைவனின் முக்கியக்கட்டளைகள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான கட்டளைகளாகவே இருந்துவந்துள்ளன. ஏகத்துவ நெறியையும், நல்லறங்களையும்,வணக்க வழிபாடுகளையும் செய்யுமாறு கட்டளையிடப்படும். அதே வேளையில் இறைவனுக்கு இணைகற்பித்தலையும் அசத்திய வழியையும் நெறியற்ற வாழ்வையும் எதிர்;த்துப் போராடவேஇறைதூதர்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர்.

ஆகாதவைகளையும், மனித இயற்கைக்கு மாறாக வாழ்ந்த லூத் மக்களையும், உலகில் இறைவனுக்கெதிராக இறுமாப்புடன் வாழ்ந்த ஆது,தமூத் மக்களையும் இறைதூதர்களை எதிர்த்துநின்ற கொடுங்கோலர்களையும் அவ்வப்போது அழித்துபின் வரும் மக்களுக்கோர் பாடமாகவும்,தடயமாகவும் இறைவன் ஆக்கியிருப்பதை அருள் மறை அழகாகப் படம் பிடித்துக்காட்டுறது. அவன் கூறியவாறே யாவும் காலத்தால் நிரூபணமாகிவருகிறது.

ஷரீஅத்தை நடைமுறைப் படுத்துவோம்


ஷரீஅத்தை நடைமுறைப் படுத்துவோம்