Wednesday, March 13, 2013

குர்ஆனில் கறையான்கள்!



திட்டமிட்டுச் செயலாற்றும் கறையான் (34:14)

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ

அவருக்கு (சுலைமானுக்கு) நாம் மரணத்தை விதித்த போது பூமியல் ஊர்ந்து செல்லும் 
கறையான் தான் அவரது மரணத்தை (ஜின்களுக்குக்) காட்டிக்கொடுத்தது. (34:14)

எறும்புகளைப்போல கறையான்கள் உருவத்தில் சிறிதாக இருந்தாலும், திறமையில் 
சிறந்தவை!
இந்த அற்பமான கறையான்கள் மனிதனே வியக்குமளவுக்கு புற்றுகளை ஒரு வரை 
படத்திலுள்ளது போல (Plan) திட்டமிட்டு மிக நேர்த்தியாக கட்டிமுடிப்பது அதிசயமாக உள்ளது. 
ஒரே நேரத்தில் ஒன்றல்ல, பல புற்றுகளை அதுவும் மிக உயரமான அளவுக்கு ஏழு மீட்டர் வரை 
( 21அடி ) கட்டி முடிக்கின்றன.

பல அறைகள்
குஞ்சுகள் தங்குவதற்கு தனி அறை!
கறையான்கள் உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்குவதற்கு தனிக் கூடம் (Hall).
மற்றும் அதன் தலைவியான ராணிக்கு சிறப்பு அறை!

என பல சிறிய பெரிய பிரிவுகளைக் கொண்டது தான் கறையான் புற்று.
காற்றோட்ட வசதி (Ventilation )
புற்றுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது அதன் உள்ளறைகளில் கறையான்கள் உருவாக்கும் பிரத்தியேக குளிhந்த கற்றோட்ட வசதி.

மிகவும் மெல்லியத் தோல்களால் படைக்கப்பட்ட கறையான்கள் உயிர் வாழ குளிர்ந்த காற்றுத் 
தேவை. எனவே கறையான்கள் தங்களின் புற்றுக்களில் உள்ள அறைகளின் சீதோஷ;ண 
நிலையை (வுநஅpநசயவரசந) ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குளிர்ந்த நிலையில் வைத்துக் 
கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அவ்வாறில்லையெனில் வெப்பத்தின் காரணமாக அவை உயிரிழக்க நேரிடும். கறையான்கள் 
தங்களது புற்றுக்களில் உட்புறம் காற்று புகும் வகையில் துளைகளை உருவாக்குகின்றன. 
புற்றுக்களின் தரைப்பகுதியைத் தோண்டி தண்ணீரைக் கசியச் செய்கின்றன. புற்றுக்களின் 
தரைப்பகுதியில் கசியும் தண்ணீரும், வெளியிலிருந்து வரும் காற்றம் கலந்து 
கறையான்களுக்குத் தேவையான குளிர்ந்த வீதொஷண நிலை உருவாகின்றன.

இந்த குளிர்ந்த காற்றின் மூலம், கறையான்கள் தங்கள் புற்றுகளில் அவை உயிர்வாழவதற்குத் 
தேவையான ஈரப்பதத்தையும்,வெப்ப நிலையையும்,சம நிலையில் வைத்துக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு அற்புதச் செயலை செய்து முடிப்பதற்கு கறையான்கள் திட்டமிட்டும், ஒரு 
வரை யறைக்குள் பலவற்றை ஒன்றிணைத்தும் கவனத்திற்கொள்வது எவ்வளவு கடினமானது 
என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் குறிப்பிட்ட ஒன்றிரண்டைத்தான் இற்கே 
கூறியுள்ளோம்.. இவையல்லாது இன்னும் ஏராளமான செயல்களை செய்கின்றன.

பாதுகாப்பப்பணி

கறையான்களின் பண்புகளில் மிகவும் முக்கியமான மற்றொன்று தங்கள் புற்றுகளை 
பாதுகாக்கும் பணியாகும். தங்களின் ஏழுமீட்டர் உயரமுள்ள புற்றுக்களில் சிறிது பழுது 
ஏற்பட்டாலும் உடனடியாக கறையான்கள் எச்சரிக்கையாகிpவிடுகின்றன.

கடற்பாறைகளால் கூட இடிக்கமுடியாத அளவுக்கு மிகவும் கடினமாகவும்,பலமாகவும் 
புற்றுகளை அமைக்கும் அதிசய ஆற்றலை மிகவும் பொடிய இந்த கறையான்கள் பெற்றிருப்பது 
அதிசயமல்லவா?

கண்களே இல்லாத கறையான்கள்

இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் 
கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா?

கொசுக்களுக்கு 100 கண்களைக் கொடுத்த இறைவன் கண்களே இல்லாதும் என்னால் 
படைப்புகளை படைத்து இயங்கச் செய்யமுடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

தந்தையில்லாமல் நபி ஈஸாவை பிறக்கச் செய்த இறைவனுக்கு, தாயில்லாமல் ஹவ்வாவை 
பிறக்கச்செய்த இறைவனுக்கு, தாயும் தநதையும் இல்லாமல் பிறக்கச்செய்த இறைவனுக்கு, 
இது ஒன்றும் பெரிய காரியமல்ல.

link : http://www.facebook.com/TamilMumeen

No comments:

Post a Comment